சிறிய அமைச்சரவை இளைஞர்களுக்கு முன்னுரிமை: ஜனாதிபதி

பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதுடன் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.இம்முறை அமைச்சரவையை சிறியதாக்கும் அதேவேளை, இளைஞர்களுக்கு முன்னுரிமையளிப்பதும் தமது எதிர்பார்ப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நாட்டில் அரசியல் செய்ய எவருக்கும் உரிமையுண்டு. தனிப்பட்டவர்களைப் பாதிப்படையச் செய்ய நாம் தயாரில்லை. அவ்வாறு அரசியல் நடத்தவும் முடியாது. எவரும் அரசியல் நடத்தும் சுதந்திரம் இந்நாட்டில் உள்ளது என்பதை மக்கள் அறிவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட விசேட மாநாடு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பண்டாரவளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண ஆளுநர் நந்தாமெத்தியூ, மாகாண அமை ச்சர் செந்தில் தொண்டமான் உட்பட மாகாண அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் புதல்வர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார். இத்தகைய புதிய இளைஞர்களை வரவேற்று ஆதரவளிப்பது சிறந்தது. புதியவர் களுக்கு கௌரமளிப்பதும் வரவேற்பதும் வாழ்த்துவதும் இலங்கையில் மட்டுமன்றி முழு ஆசியாவிலுமுள்ள சிறந்த பழக்க வழக்கமாகும்.

மலையக மக்கள் வெள்ளையர்களின் ஏகாதிபத்திய போராட்டத்திற்கு முகங்கொடுத்தவர்கள். அவர்களின் தாக்குதல்களில் பலியானார்கள். அத்தகையவர்களைக் கொன்று குவிக்கும் அளவிற்கு வெள்ளை ஏகாதிபத்தியம் கொடூரமானதாகத் திகழ்ந்தது.

அந்த வகையில் ஊவா மக்கள் உறுதியானவர்கள். டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார போன்றவர்கள் தாம் பதவி வகித்த கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்கள். ஒரு பாராளுமன்ற சபாநாயகரைக் கூட எம்மால் நியமிக்க முடியாத நிலையில் சபாநாயகராக நியமனம் பெற்றவர் அவர்.

இம்முறை இளையோர் பலர் எம்முடன் உள்ளனர். கடந்த முறை மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் பெற 19 ஆசனங்கள் எமக்குக் குறைவாக இருந்தன. இம்முறை அதனை நாம் பெற்று மூன்றிலிரண்டு பெரும் பான்மையை நாம் பெற்றுக்கொள்வது மிக உறுதி.

பல்வேறு கருத்துக்கள், வதந்திகள், சேறுபூசுதல் நடவடிக்கைகளுக்கு எமது மக்கள் துணை போகின்றவர்களல்ல. அதற்குச் செவிமடுப்பவர்களுமல்ல. அவர்கள் எம்மை வெற்றிபெறச் செய்வது உறுதி. எமது பக்கம் விரல் நீட்டியவர்கள் தற்போது தாமே திண்டாடும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதை மக்கள் அறிவர்.

நகர்ப்புறங்களை அபிவிருத்தியால் கட்டியெழுப்பும் கருத்திட்டமொன்றை நாளை முதற்கட்டமாக கொழும்பில் ஆரம் பித்து வைக்கவுள்ளோம். “நகமு புரவர” எனும் இக்கருத்திட்டத்தினூடாக சகல நகரங்களும் எதிர்காலத்தில் புனரமைக்கப்படும்.

இக்காலத்தில் நாம் பல்வேறு அபிவிருத் திப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். அவற்றில் இளைஞர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவது அவசியம். இம்முறை விசாலமான அமைச்சரவையொன்றை ஏற்ப டுத்துவது எமது நோக்கமல்ல. எனினும் இளைஞர்களுக்கு முன்னுரிமையளிப்பதே எமது நோக்கமாகும். அவர்களின் பலத்தை நாம் மட்டுமன்றி நாட்டு மக்களும் கண்டுணர்ந்துள்ளார்கள்.

நாம் நாடு முழுவதும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். அதற்கு துடிப்புடன் செயலாற்றக் கூடியவர்களின் சேவை மிகவும் அவசியமாகிறது. நாம் முன்னரைவிட பெருமளவு ஆசனங்களைப் பெற்றுப் பலமடைவது உறுதி.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக இணைந்து கொண்டுள்ள ஐ.தே.க.யினரையும் அத்துடன் சகல இன மக்களையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். நீதி நேர்மையான தேர்தலொன் றுக்காக நாம் உழைப்போம்.

வன்முறையில் ஈடுபட வேண்டியதில்லை. இந்நாட்டில் அரசியல் நடத்தக் கூடிய உரிமை சகலருக்குமுண்டு. பலரும் பலவாறு தூற்றுகின்றனர். சுதந்திரமில்லை யென்று கூச்சலிடுகின்றனர். மக்கள் உண்மை நிலையை அறிவர். அரசியல் செய்வதற்கு மற்றவருக்கும் இடமளித்து உங்கள் அரசியலை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

தனிப்பட்ட எவரையும் நாம் தாக்கப்போவ தில்லை. அவ்வாறு அரசியல் நடத்தவும் முடியாது. அதனால்தான் அரசியல் நட த்தும் உரிமையை அனைவருக்கும் உரிய தாக்கியுள்ளோம். இளைஞர்களை நாம் வாழ்த்துவதுடன் நேர்மையாக அரசியல் நடத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வின் போது பதுளை மாவட்டத்திலிருந்து ஐ.தே.க. ஆதரவாளர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதுடன் ஜனாதிபதியைச் சந்தித்து அவரிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் அங்கத்துவப் பத்திரத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply