ஜெர்மனியில் 4 ஆயிரம் விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டம்
ஜெர்மனியில் ஏயார் லைன் லுப்தான்சா விமான நிறுவனம் பிரசித்தி பெற்றது. இதில் சுமார் 4 ஆயிரம் விமானிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கக் கோரி 4 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதனால் 3 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் பல விமானங்களின் போக்குவரத்துத் தாமதமாகவும் நடைபெறுகிறது. எனவே பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் எதிர்வரும் 25ஆந் திகதி வரை நடைபெறுவதால் இதில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் வாபஸ் பெற்று வேறு விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply