எதிர்காலத்தில் கிழக்கின் தலைமைத்துவத்தை புத்திஜீவிகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
கிழக்கில் ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் புத்திஜீவிகளை அங்கீகரித்து ஆதரவை வழங்குமாறும் அமைச்சர் முரளிதரன் கிழக்கு மாகாண மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண வேட்பாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றியடையச் செய்து அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்த முடியும். இதனூடாக கிழக்கில் அபிவிருத்தியை மேலும் வலுப்பெறச் செய்ய முடியும். இதே போன்று வடக்கி லும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. வெற்றியடையும் என்றும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply