வவுனியா தடுப்பு முகாமிலிருந்து 54 பெண்கள் விசாரணைக்கா பூசா தடுப்பு முகாமில்
வவுனியா பம்பைமடு, செட்டிக்குளம், வலயம் 6 ஆகிய பெண்கள் தடுப்பு முகாம்களில் இருந்து 54 பெண்கள் பூஸா தடுப்பு முகாமுக்கு மேலதிக கடந்தவாரம் விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பு அதிகாரி த.கனகராஜ் எமக்குத் தெரிவித்தார். தடுப்பு முகாமில் வைத்து கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று முதல் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எமக்குத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12பேர் , கிளிநொச்சியைச் சேர்ந்த 16 பேர், முல்லைத்தீவைச் சேர்ந்த 09 பேர், மன்னாரைச் சேர்ந்த 07பேர் , மட்டக்களப்பைச் சேர்ந்த 03 பேர், திருகோணமலையைச் சேர்ந்த 05 பேர், வவுனியாவை சேர்ந்த 02 என 25 பேர் இவ்வாறு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பெண்கள் தடுப்பு முகாமிலிருந்து முன்னர் பூஸா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 49 பெண்களின் விவரங்கள் கடந்த வாரம் முதல் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply