சிலியில் பயங்கர பூகம்பம் பேரழிவாக அறிவிப்பு! : 122 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது.சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 53 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலை (சுனாமி) 9 அடி உயரத்திற்குக் கிளம்பி சிலி நாட்டைத் தாக்கியதாக பசுபிக் பெருங்கடலிலுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
ஆனால், ஆழிப்பேரலை 40 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தாக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நேர் கிழக்காக சிலியின் கடலோரம் அமைந்துள்ள மாலே எனும் சிறு நகரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதோ அல்லது 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ஆனால், பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலாலும் பேரழிவு ஏற்பட்டுள்ளதென அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியிருந்தது. அதைவிட ஒரே ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தோனிஷிய பூகம்பத்தில் மூன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply