மிலிபாண்ட்டுக்கு நல்ல பாடம் புகட்டுவோம்: விமல் வீரவன்ச ஆவேசம்
இலங்கை விவகாரங்களில் தலையிடும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியில் தலைவர் விமல் வீரவன்ச கூறினார். உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையைக் கூறு போடுவதும், புலிகளின் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு மீண்டும் களம் அமைத்துக்கொடுப்பதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் இரகசியத் திட்டமாகும். இதனை முறியடிக்க நாட்டுப்பற்றுள்ள அனைத்துச் சக்திகளும் ஒன்றிணையவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரித்தானிய வெளிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரதமர் கோடன் பிறவுண் ஆகியோருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply