சூடானில் உள்நாட்டு கலவரம்: ராணுவம் சுட்டதில் 200 பேர் பலி
சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் உள்நாட்டு கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு பகுதியில் உள்ள மத்திய ஜெபல்மாரா நகரில் ராணுவத்துக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டை கடந்த ஒரு வாரமாக நீடித்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சூடான் விடுதலை போர்படையினர் உள்ளனர்.
ஜெபல்மாராவில் தொடங்கிய உள்நாட்டு கலவரம் நாடு முழுவதும் பரவி வருகிறது. எனவே கலவரத்தை அடக்க சூடானின் விமானப்படையினர் இரவு பகலாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிசூடு மற்றும் குண்டு வீச்சில் சுமார் 200-க் கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தகவலை சூடான் விடுதலை போர்ப்படை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதை சூடான் அரசும், ராணுவமும் மறுத்துள்ளது. ஐக்கியநாடுகள் சபை அதிகாரிகளும் இதை உறுதி செய்யவில்லை. இறந்தவர்கள் குறித்து இன்னும் கணக்கிட வில்லை என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. கலவரக்காரர்களை அடக்கும் நடவடிக்கையில் ராணுவம் மும்முரமாக உள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply