சிலி பூகம்பம்: உணவு கிடைக்காததால் கடைகளுக்கு தீ வைப்பு மோதலை தடுக்க ராணுவம் குவிப்பு

சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 723 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூகம்பம் பாதித்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் மீட்பு பணிகள் முடிய வில்லை. இடிபாட்டுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன. நிவாரண பணியும் இன்னும் முழுமையாக நடைபெற வில்லை. மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்க வில்லை.
 
இதனால் மக்கள் கடைகளில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பூகம்பம் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்திய கான்செப்சியன் நகரில் கடைகளில் பொருட்களை கொள்ளையடிக்க சென்ற வர்களை ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கும் ஏராள மான கடைகளுக்கும் தீ வைத்தனர்.
 
இதையடுத்து அந்த மக்கள் மீது ராணுவத்தினர் சுட்டனர். இதில் ஒருவர் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கான்செப்சியன் நகரில் கூடுதலாக 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
 
பூகம்பத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்னும் சீர்படுத்தப்படவில்லை. குடிநீர் வினியோகம் இன்னும் சீராகவில்லை. சிலி நாடு முதலில் வெளிநாட்டு நிவாரண உதவிகளை ஏற்க மறுத்தது. இப்போது வெளிநாட்டு உதவிகளை ஏற்பதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து பல நாடுகள் உதவியளிப்பதாக அறிவித்து உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply