தெஹிவளையில் இரண்டு வெள்ளைப்புலிகள்

சீனாவிலிருந்து இரண்டு வெள்ளை புலிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பென்தெரா டைக்ரிஸ் டைகர்ஸ் (Panthera Tigris Tigers) எனப் படும் இவ்வெள்ளைப் புலிகள் சியங் ஜிவ் சவாரி பூங்காவிலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிச்சாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

உலகில் மிக அரிதாகக் காணப் படும் இந்த இனப் புலிகள் முதல் முறையாக நம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் நேற்று முதல் புலிகளை பார்வையிட அனுமதிக்கப் பட்டனர். வெள்ளைப் புலிகள் கோலாலம் பூரினூடாக இலங்கைக்கு கடந்த 27ஆம் திகதி கொண்டுவரப்பட் டதாக விலங்கியல் பூங்காவுக்கான பணிப்பாளர் அனந்த லொக்குரன முக்க தெரிவித்தார்.

மிருகங்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட் டிருக்கும் இப்புலிகளுக்கு விரைவில் இலங்கைப் பெயர்கள் வழங்கப்படவுள்ளன. இதில் ஆண்புலி மூன்றரை வயதி னையும் பெண் புலி மூன்று வயதும் இரண்டு மாதங்களும் நிறைந்தன.

இவை ‘பெங்கல்’ புலிகள் என வும் அழைக்கப்படும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளைப் புலிகளின் வாசஸ்த லமாக கருதப்படுகின்றன.

புலிகளின் பரம்பரையலகில் ஏற்ப ட்ட மாறுபட்ட தன்மையே இவை வெள்ளை நிறமாக தோன்றுவதற்கு காரணமாகியுள்ளது. இரண்டு மீற்றர் நீளம் கொண்ட இப்புலிகள் சுமார் 180௨85 கிலோ கிராம் வரை நிறைகொண்டவையாக இருக்கின்றன.

உலகில் மூவாயிரம் வெள்ளைப் புலிகளே இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவை மூன்று கிலோ கிராம் நிறைகொண்ட இறை ச்சியினை ஒரு வேளை உணவாக உட்கொள்ளும் என தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை அதிகாரியொருவர் கூறி னார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply