தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சிறார் போராளிகளை விடுவிக்க ஒப்பந்தம்

இலங்கையின் கிழக்கே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமது படையணிகளில், சிறார்களைச் சேர்ப்பதை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு கால அட்டவணையுடன் கூடிய செயல் திட்டத்துக்குக் கடந்த திங்கட்கிழமை ஒப்புக் கொண்டுள்ளதாக , ஐ.நா சபையின் சிறுவர்களுக்கான நிதியமான யுனிசெப் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்தச் செயற்திட்டத்தில் , தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வினாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கையெழுத்திட்டதாக யுனிசெப்பின் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைச்சாத்திடும் நிகழ்வின்போது, கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் புனர்வாழ்வுக்கான சிரேஷ்ட ஆணையாளர் சுஹதா கமலத் , யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் துவாமெல் ஆகியோர் உடனிருந்ததாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது.

இந்தச் செயற்திட்டம் அரசியல் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுவதுடன், இது கால அட்டவணையுடன் கூடிய ஒன்று என பிபிசி தமிழோசையிடம் யுனிசெப்பின் தகவல் துறைத் தலைவர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையுள்ள நிலையில் 133 சிறார்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினரால் பிடித்து வைக்கப்படுள்ளதாகவும், இவர்களில் 62 பேர் தற்பொழுது 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ஏனைய 71 பேர் 18 வயதுக்குக் கீழே இருக்கும்போது சேர்க்கப்பட்டவர்கள் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply