பேராசிரியர் அ. மார்க்ஸ் கொழும்பில் பங்குபற்றும் விசேட நிகழ்வுகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலை ஹிவஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ‘மர்கஸூஸ் ஸலாமா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள விசேட கருத்தரங்கமும் சொற்பொழிவு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வுகளில் விசேட அதிதியாக இந்தியாவின் பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான பேராசிரியர் அ. மார்க்ஸ் கலந்து கொள்ளவுள்ளார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மு.ப 9 மணி முதல் பி.ப. 2 மணி வரை சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘முஹம்மது நபி – சமூக அரசியல் ஆளுமை’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கருத்தரங்கில் ஜாமிஆ நளீமியா கலாபீட பணிப்பாலர் காலநிதி எம்.ஏ.எம். சுக்ரி, களனி பல்கலைக்கழக பவுத்த தத்துவவியல் பேராசிரியர் தயா எதிரிசிங்க ஆகியோரும் விசேட உரைகளை ஆற்றவுள்ளனர்.

அத்துடன், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மருதானை ஸாஹிரா கல்லூரியில் ‘ நான் புரிந்து கொண்ட நபிகள்’ எனும் தலைப்பில் விசேட சொர்பொழிவு ஒன்றையும் பேராசிரியர் அ. மார்க்ஸ் நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில் ‘நபிகளாரின் வாழ்வியல் பாடங்களும் படிப்பினைகளும்’ எனும் தலைப்பிலான நூல் வெளியீடும் மீள்பார்வை பதிப்பகத்தின் வெளியீடுகளின் புத்தகக் கண்காட்சியும் இடம் பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply