“ஓற்றுமையெனும் கையிற்றைப் பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்”

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த சூடு இன்னும் ஆறவேயில்லை அதற்குள் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வந்துவிட்டது. இலங்கை வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு பெரும்மலவிலான அரசியல் கட்சிகளும் சுயேற்சைக்குழுக்களும் களம் இறங்கியுள்ளன. ஏறத்தாழ 196 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக 7620 பேர் அரசியல் குளத்தில் நீச்சல் அடிக்க குதித்துள்ளனர். இவையெல்லாம் விடுதலைப்புலிகள் இன்மையினால் வந்த தையிரியம் போலும் தெரிகின்றது.

 தம்பி பிரபாகரனையும் அவரது தமிழீழப் போராளிகளையும் தமிழ் பேசும் மக்களையும் பல்லாயிரக்கணக்கில் குற்றுயீராக்கியும் ஊனமுறவைத்தும் கொண்று குவித்து தங்கள் வீடுகள் வளவுகள் சொத்து சுகங்களை இழக்க வைத்து அகதிமுகாம்களிலும் கொடிய மிருகங்கள் வாழும் காடுகளிலும் கண்ணிவெடி புதைநிலங்களிலும் உடுத்திய உடையுடன் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலைக்கு ஆழாக்கிய யுத்த யாம்பவான்களில் ஒருவராகிய முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவை அரியாசனத்தில் அமர்த்துவதற்கு நாம் தமிழர்கள் முஸ்லிங்களும் ஒற்றுமையாக ஒரணியில் இனைந்து இனபேதந்களை மறந்து எப்படி பாடுபட்டோம்?

 எம்மோடு சிங்கள தேசிய கட்சியான ஜக்கிய தேசியக்கட்சியும் தமிழர் சுயாதிபத்தியத்தில் தடைபோட்டு வந்த மக்கள் விடுதலை முன்னனியும் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் மேதகு மகிந்த ராஜப்பக்ஸவை தோற்கடிக்க போராடி தோற்றுப் போனோம் சுமார் 18 இட்சம் வாக்குகளால்.

இக்காலங்களில் தமிழ் முஸ்லிம் உறவுகள் பற்றியும் சிறுபான்மை இனத்தின் தீர்மானிக்கும் சக்தி பற்றியும் வாய்கிழிய கத்தினோம். தமிழ் முஸ்லிம் தலைவர்கள் தங்களுக்கு அணிவிக்கப்பட்ட பூ மாலைகளையும், காகிதமாலைகளையும், சரிகை மாலைகளையும், மாறி மாறி மாற்றிக் கொண்டோம். பொன்னாடைகளை மாறி மாறி போர்த்திக் கொண்டோம்.

 “தமிழா நீதான் எனது அண்ணன்” என்றும் “முஸ்லிம்  நீதான் எனது தம்பி” என்றும் கட்டிப்பிடித்து ஆழிங்கணம் செய்து கொண்டோம். ஆயிரம்  ஆண்டு கடந்து வந்த தமிழ் முஸ்லிம் உறவுப்பாலம் யாராலும் அசைக்கமுடியாத சக்தியென்றும் வாய்நோகப் பேசினோம். நாம் சாதாரன பொது மக்கள் இக் கர்ச்சணையைப் பார்த்து புல் அரித்துப் போனோம்  அதிர்ச்சியில் உறைந்து போனோம்.

 எம்மை அகதிகளாக்கிய விடுதலைப்புலிகளையும் அரசாங்கத்தையும், இராணுவத்தையும், இராணுவத் தளபதிகளையும் பெரு மனதுடன் மன்னித்து புதிய ஆட்சி அதிகாரத்திற்கு காத்திருந்தோம். என்னே ஏமாற்றம் இலங்கை அரசின் வரலாற்றில் என்றுமே பெற்றிராத சுமாh 18 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று 58 வீகித பெரும்பான்மையுடன் ஜனாதிபதி அவர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டார்.

 இதுவே தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் ஏமாற்றமாகும். இத் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்தோம். வாக்கு மோசடியென்று கத்தினோம். உயர் நீதிமண்றில்  தேர்தல் ஆட்சேபம் மனுவொன்றைக்கூட தாக்கள் செய்தோம். அத்துடன் ஜனாதிபதி தேர்தல் விழா முடிவிற்கு வந்தது.

 இந்த இடைப்பட்ட காலத்தில் சரத் பொன்சேக்கா கைது செய்யப்டடு சிறை வைக்கப்பட்டார். அதன் பின்னர் திடீர் என்று  பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. நியமன பத்திரங்கள் தாக்கல் செய்யும் திகதியும் தேர்தல் நடைபெறும் திகதியும் ஜனாதிபதியின் அதிர்ஷ்ட இலக்கத்திற்கு அமைவாக அறிவிக்கப்பட்டது.

 அத்துடன் நாட்டில் சிறுபான்மை இனங்கள் பற்றி பிடித்துக்கொண்டிருந்த “ஒற்றமையென்னும் கையிறு அறுந்து போனது இந்த கையிற்றை அறுப்பதற்கு காத்திருந்த அரசாங்கமும் தமிழ் எட்டப்பர் கூட்டங்களும் முஸ்லிம் கட்சி மாறிகளும் பெருமளவில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப்போயினர்.

 இப்போதுதான் தர்ம யுத்தம் தொடங்கியிருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் சுமார் 32 அரசியல்  கட்சிகள் சுமார் 64 சுயெட்ச்சை குழுக்கள் உட்பட  சுமார் 96 குழுக்கள் களம் இறங்கியிருக்கின்றன.

 இதன் விளைவாக வடக்கிலும் கிழக்கிலும் ஒன்றாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்குள் விரிசல் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றது. தம்பி பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற தையிரியத்தாலும் பாராளுமன்ற சுகமே சொற்ப போகம் என்பதாலும்  தாராள தரகுப்பணம் வாரி வாரி இறைக்கப்பட்டமையாலும் எண்ணிப் பார்க முடியாத அளவு வேட்பாளர்கள கூட்டம் கூட்டமாக களம் இறங்கியுள்ளனர்.

 இதன் விளைவாக தமிழ் முஸ்லிம் உறவுகள் சிதறடிக்கப்படுவதோடு பாராளுமன்ற அங்கத்துவத்திலும் பின்னடைவை ஏற்படுத்தவதில் சம்மந்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

 தற்போதோ தமிழ் மக்கள்  பல கட்சிகளாக பிரிந்துள்ளதோடு முஸ்லிம் மக்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் முகமாக பல கட்சியில் மோத உள்ளனர். இதனை ஊக்கிவித்த அரசாங்கம் வடகிழக்கில் மேலும் அதிகமான ஆசனங்களைப் பெறும் என்பது உண்மை

 “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்று முன்னர் விடுதலைப்புலிகளின் தாரக மந்திரமாக பேசப்பட்ட மேற்படி சுலோகம் சற்று திரிபுபட்டு தமிழர்களின் தாகம் தமிழ் பேசும் தாயகம் என மாற்றம் பெற்று இலங்கையின் மூன்றாவது சக்தியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் வட கிழக்கில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் கூட நிறுத்தப்படாமையின் காரணம் என்ன யாழ்மாவட்டத்தில் முன்னாள்  நாடாளு மன்ற அங்கத்வரும் சட்டத் தரணியுமான ஜனாப் ஆ.ஆ இமாம் அவர்களும் வன்னி மாவட்டத்தில் மூத்த ஊடகவியளாலரும் சமூக ஆர்வலருமாகிய மக்கள் காதர் உட்பட மற்றுமொரு முஸ்லிம் வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் விண்ணப்பித்திருந்தும். அவர்களின் விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்படவில்லை இதுதானா தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு பரிசு.

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் தான்றோன்றித்தனமாக எடுத்த முடிவு இதுவா? யுத்த காலத்தில் எங்கும் ஒடாமல் புலம் பெயராமல் வடகிழக்கில்  வாழ்ந்தவர்கள் ஒரங்கட்டப்பட்டனர். உண்மையான தேசதொண்டர்கள் ஒதுக்கப்பட்டனர். கல்விமான்கள் புறந்தள்ளப்பட்டுள்ளனர்.

மாறாக பாராளுமன்றத்தேர்தலில் தோல்வியுற்று ஓய்வுதியமும் பெறுபவர்களும் பணக்காரர்களும் தங்களுக்கு வேண்டியவர்களும் இத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். இச்செயலானது “ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பின்;னர் நீயாரோ நான்யாரோ!” என்னும் முது மொழியை சொல்லாமல் சொல்லி வைக்கின்றது. இதன் விளைவாக 22 பாராளுமன்ற அங்கத்தவருடன் மூன்றாவது சக்தியாக விளங்கிவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இம் முறை 15 ஆசனங்களை பெறுவதுகூட சந்தேகமே

 

இதைத்தான் இலங்கை அரசாங்கம் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றது!

புதியதோர் அரசியல் கட்சியாக இலங்கையின் தேசிய அரசியலினுள் காலடி எடுத்து வைப்போம்
தமிழ் மக்களின் மீள்எழுச்சி குழு

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடியதான புதியதும், விவேகமானதும், அதேவேளை யதார்த்தமானதுமான ஓர் அரசியல் பாதையின் ஊடாக  ஓர் அரசியல் தீர்வை முழுமையாக அடைய வன்னி மாவட்டத்தில் சுயேச்சை குழுவாக போட்டியிடுகின்ற  நாம் தேர்தலின் பின் புதியதோர் அரசியல் கட்சியாக இலங்கையின் தேசிய அரசியலினுள் காலடி எடுத்து வைப்போம் என “தமிழ் மக்களின் மீள்எழுச்சி குழு” தெரிவிக்கின்றது.

எதிர் வரும் 2010 ம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் வன்னித்தொகுதியில் பட்டம் சின்னத்தில் சுயெட்சை குழு 1ல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜா குகனேஸ்வரன் தலைமையிலான குழுவினரின் “அன்றாட பிரச்சினையிலிருந்து அரசியல் தீர்வு வரை” எனும் தொனிப்பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் அமைந்துள்ள “வன்னி இன்’ விருந்தினர் விடுதியில் இம்மாதம் நான்காம் திகதி மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கின்றது.

“தமிழ் மக்களின் மீள்எழுச்சி குழு” வின் தலைமை வேட்பாளர் இராஜா குகனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாளர் சந்திப்பில் வவுனியா செய்தியாளர்களுடன் மன்னாரில் பணியாற்றும் இரண்டு அரச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுமார் 20 ற்கும் மேற்பட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன அவை :-

1,  மூன்று சகாப்தம் நீண்ட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக பேசப்படும் போதும் “தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளில் இருந்து அரசியல் தீர்வு வரை” இன்றும் முழுமையாக தீர்க்கப்படாமலேயே உள்ளது.

2,  யுத்தம் தந்து விட்டுப்போன வாhத்தைகளால் விபரிக்க முடியாத துன்பதுயரங்களில் இருந்து இன்னும் ஒரளவேனும் நாம் மீண்டெழும்பும் முன் ஏப்பிரல் 8ல் வரும்; தேர்தல் என்பது எம்மீது தினிக்கப்பட்ட ஒருஅரசியல் நிகழ்வாகவே இருக்கின்றது.

3,  தமிழ் தேசியத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில் 30 ஆண்டுகளாக   சாத்வீகப்போராட்டத்தையும் ஏனைய 30 ஆண்டுகளும் ஆயுதப் போராட்டத்தையும் கண்டுள்ளது. ஆனால் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசு முன்வைக்கக் கோரும் வலுவான அரசியல் தலைமைத்துவத்தை தமிழ் சமூகம் இழந்து ஓர் கையறு நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

4,  தமிழ் சமூகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான அரசியல் போக்குகளை விவேகமான அரசியல் அணுகுமுறையூடாக இணைக்கத்தவறும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் “தமிழர் ஐக்கியம்” என்னும் கோசம் தேர்தல் காலங்களில் முன்வைக்கப்படும் மலினமான அரசியல் யுத்தியாகும்;.

5,  சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக தமிழ் மக்கள் இடையிலான “வேற்றுமையில் ஒற்றுமை” காணும் இலங்கைத்தீவு தழுவிய விவேகமான புதிய ஓர் அரசியல் போக்கு ஒன்றை உருவாக்குவதைத்தவிர குறுக்கு வழிகளால் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டிவிட முடியாது.

6,  தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடியதான புதியதும், விவேகமானதும், அதேவேளை யதார்த்தமானதுமான ஓர் அரசியல் பாதையூடாக முழுமையாக ஓர் அரசியல் தீர்வை அடைய சுயேச்சை குழுவாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தேர்தலின் பின் புதியதோர் அரசியல் கட்சியாக இலங்கையின் தேசிய அரசியலினுள் காலடி எடுத்து வைப்போம்.

7,  வன்னி தேர்தல் களத்தில் நிகழும் இப்புதிய அரசியல் நிகழ்வு “சிறு பொறியும், காட்டுத்தீயும்” என்பது போல தமிழரின் வரலாற்று வாழ்விடங்களில் வலுவான ஓர் அரசியல் சக்தியாக எதிர்காலத்தில் பரிணமிக்கும்.

8,  30வருட யுத்தத்தால் தீர்க்கப்படாது விட்டுச் சென்ற சொல்லொணாத் துயரங்களில் மூழ்கியிருக்கும் தமிழ் சமூகத்தின் “அன்றாட பிரச்சினைகளில் இருந்து யதார்த்தமான அரசியல் தீர்வு வரை” தமிழ் மக்களின் மனச்சாட்சியாக இருந்து உண்மையின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்போம்.

9,  சர்வதேச அழுத்தங்களால் வெறுமனே கால இலக்கு ஒன்றைமட்டும் வைத்து நிகழ்த்தப்படும் மீள் குடியேற்றம் என்பது முகாம் வாழ்க்கையைவிட மோசமான நிலையை “துரித” மீள்குடியேற்றம் தோற்றுவித்துள்ளதை வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது.

10, அடிப்படை வீட்டு வசதிகள் கொண்ட முழுமையான மீள் குடியேற்றத்தை செய்யுமாறு அரசை வலியுறுத்துவோம்.

11, மாவட்ட ரீதியாக ஒரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வைத்தியசாலைகள் வன்னியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

12, ஒழுங்கமைக்கப்பட்ட சுகாதார முறையிலான குடிநீர் வசதி அனைத்து மக்களுக்கும் வழங்க ஆவன செய்யப்பட வேண்டும்.

13, மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வீட்டு மனைகளுக்கு உடனடியாக மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

14, குன்றும் குழியுமாக உள்ள வீதிகள் யாவும் உடனடியாக போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.

15, மீள் குடியேறும் மக்களின் பிள்ளைகளது ஆரம்ப, இடைநிலை, உயர் கல்விக்குரிய பாடசாலை வசதிகள் துரிதமாகவும் விரிவாகவும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

16, கா.பொ.த. சாதாரண, உயர்தர படிப்பை தெடர முடியாத இளையோருக்கு முறையான தொழில் கற்கை நெறி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

17, போரின்போது உயிரிழந்த அங்கவீனமாக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

18, கால் நூற்றாண்டு யுத்தத்தால் கிட்டத்தட்ட ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட விதவையாக்கப்பட்ட பெண்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

19, யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட சரணடைந்த முன்நாள் போராளிகள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட திறமைகளுக்குப் பொருத்தமான தொழிற்பயிற்சி வழங்கி துரித புணர்வாழ்வுத்திட்டத்தினு+டாக அவர்கள் மீள குடும்பங்களுடன் இணைக்கப்படல் வேண்டும்.

20, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மாணவர்கள் தமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவாறு தாம் விரும்பிய மாவட்டங்களில் கல்வி கற்க வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.

21, வன்னிப் பெரு நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்ட மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மீளத் தொடங்க ஆதார உதவிகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

22, கடலோரத் தமிழ்க் கிராமங்களில் பாரம்பரியமாக கடல்த் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் தமது கடற் தொலிலை எதுவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மேற்கொள்ளவும் நவீன முறைகளில் ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடவும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

23, யுத்தத்தில் வாகனங்களை இழந்த குடும்பங்கள் புதிய வாகனங்களை மீளக் கொள்முதல் செய்ய அரசு மானிய உதவி வழங்கப்பட வேண்டும்.

24, வன்னிப் பிரதேச வீடுகள் பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதி அமைப்புக்கள் , மின்சாரம், குடிநீர் சிவசாயம் , மீன்பிடி மற்றும் தொழில்கள் இவை அணைத்தும் உள்ளடக்கிய மீள்குடியேற்றம் முழமையாக நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

25, வன்னிமாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இராஜா குகனேஸ்வரன் தலைமையில் பட்டம் சின்னத்தில் சுயெட்சை குழு 1ல் போட்டியிடும் தமிழ் மக்களின் மீள்எழச்சிக்குழவிற்கு வாக்களிப்பதன் மூலம் எமது எதிர் காலத்தை எமது கைகளில் எடுப்போம்.

இவ்வாறு எதிர் வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இராஜா குகனேஸ்வரன் தலைமையில் “பட்டம்” சின்னத்தில் சுயேட்சை குழு 1ல் போட்டியிடுபவர்களின்; தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply