கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை

சோமாலியா கடற்பரப்பில் கட த்தப்பட்ட கப்பலில் இருந்த 13 இலங்கையர்களும் பாதுகாப் பாக இருப்பதாக கடத்தப்பட்ட கப்பல் கொம்பனி அறிவித்துள்ளது. ஜப்பானிலிருந்து மசகு எண் ணெய் ஏற்றிக்கொண்டு சவூதி சென்று கொண்டிருந்த கப்பல் சோமாலியக் கடற்பரப்பில் கடத்தப்பட்டது.

இந்தக் கப்பலின் கப்டன் உட்பட 14 சிப்பந்திகள் இருந் தனர். கப்டன் கிஅக் நாட்டைச் சேர்ந்தவர். ஏனைய 13 பேரும் இலங்கையர்கள். அவர்களின் பெயரை கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. யாக்கூப் சேவியர், வீனஸ் ரொபின்சன், ஹேவா பதகே ரங்கா ஜயசிங்க, விஜயமுனி எல்மோ அன்சலாம் சொய்சா, செல்வராசா ராஜவேல், பால கிருஷ்ணன் ஜயரஞ்சன், ரொபேட் ஜோசப், கனகசபாபதி துஷ்யந் தன், அருமைசேகரம் பசில்ராஜா, லக்ஷ்மிகாந்தன் கஜேந்திரன், ஆரோக்கியசாமி பிள்ளை பிரிட்டோ லோரன்ஸ், சவரிமுத்து அற்புதராஜா, ராஜகோபால் ஜெயக்குமார் ஆகியோரே கப்பலில் உள்ளவர்களாவர்.

இவர்களை மீட்டெடுப்பதற் காக கடத்தல்காரர்களுடன், கப் பல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply