மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என இந்தியா நம்புகிறது: நிருபமா ராவ்
இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நடமாட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் வரவேற்றுள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் பட்சத்தில், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களிலேயே சுமூகமான வாழ்க்கையை வாழ்வதற்கு வசதி ஏற்படும் என்றும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர், அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், ஏனைய முக்கிய தலைவர்களையும் சந்தித்து உரையாடிய போது இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண புனரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புக்கு இந்தியா வழங்கிய உதவிகளை வரவேற்ற இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், போரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் இன்னமும் எஞ்சியுள்ள எழுபதாயிரம் பேரில் பெரும்பான்மையானவர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கே தங்கியிருப்பதாக கூறினார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கு இந்தியா உதவும் என்றும் நிருபமா ராவ் அறிவித்துள்ளார். இலங்கையின் பல்வேறு நிறுவனங்களுக்கு 55 பேருந்துகளையும் இந்தியா வழங்க முன்வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply