ஜேர்மனியில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் கைது பின்னணியில்: மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ்

ஜேர்மனியில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள இலஙகை தூதரகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக இலங்கை தூதரகம் கூறியுள்ளது.

ஜேர்மனிக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார். “இலங்கையில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள். இது இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது” என்று கூறியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்ததற்காக ஜேர்மனியின் புலனாய்வுச் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு தகவல்களை வழங்கி இந்தக் கைதின் பின்னணியில் தாமே இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இலங்கை இராணுவத்தின் 57வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், வன்னிப் போரில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது இங்கு கூறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply