செயலணி-2 கனகராயன் குளத்தை மீட்டனர்

வன்னிப்படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இரண்டாவது செயலணியினர் புலிகளின் பிடியிலிருந்த கனகராயன்குளம் பகுதியை இன்று (டிச:05) காலை படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று படையினரால் கைப்பற்றப்பட்ட புளியங்குளத்திலிருந்து வடக்காக 10 கி.மீ தூரத்தில் கனகராயன்குளம் அமைந்துள்ளது. ஏ9 பாதைக்கு மேற்காக நகர்ந்து கனகராயன்குளத்தை கைப்பற்றியுள்ளனர்.

படையினர் ஏ9 பாதையில் அமைந்துள்ள புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம் எனபன கைப்பற்றப்பட்டதால் புலிகளின் பலம் வன்னியில் செயலிழக்கபட்டு வருவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வன்னியில் புலிகளிடம் கட்டுப்பாட்டில் அகப்பட்டுள்ள பொதுமக்கள் வெளியே வருவது இனிமேல் இலகுவாகும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

படையினர் கனகராயன் குளப்பகுதிக்குள் நுளையும் போது பொதுமக்கள் 6 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர். கனகராயன்குளம் விடுவிக்கப்பட்டதும் மேலும் பொதுமக்கள் பெருந்திரளானோர் வர இருப்பதாக வந்துள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
கனகராயன்குளம் கைப்பற்றியதனால் ஏ9 பாதையில் 21கி.மீ.தூரம் பாதுகாப்பு படையினரின் வசமுள்ளது.

http://www.defence.lk/orbat/Default.asp

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply