பாணந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது கண்ணீர்புகை பிரயோகம்
ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்துகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுவிக்கக் கோரியும் பாணந்துறையின் இன்று காலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் தாக்கியுமுள்ளனர். இதில் காயமடைந்த மூவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply