கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்ய வசதி ஏற்பாடு

இலங்கைத் தலைநகர் கொழும்பின் காவல் நிலையங்களில் பொதுமக்கள் முதல் தடவையாக தமிழில் புகார் தெரிவிக்க வழிவகை செய்யும் விசேடப் பிரிவுகள் அமைக்கப்பட்டுளன. சாதாரணமாக தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு இலங்கைப் பிரஜை கொழும்பு காவல் நிலையம் ஒன்றில் புகார் தெரிவிக்கவோ வாக்குமூலம் வழங்கவோ வேண்டுமானால் அவர் சிங்களம் தெரிந்தவர் ஒருவரைக் கூட்டிக்கொண்டுபோய் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்ற நிலைதான் இத்தனைக் காலமும் இருந்துவந்தது.

இலங்கை பொலிஸார் பெரும்பாலும் சிங்களம் மட்டும் அறிந்தவர்களாகவே இருந்துவருகின்றனர் என்பது இதன் காரணம்.தாங்கள் சொல்வதைக் கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியாத நிலை தமிழர்களுக்கு இருந்துவந்தது.

தமிழ் பேசக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கொழும்பின் நான்கு காவல் நிலையங்களில் விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது மற்ற மற்ற காவல்நிலையங்களுக்கும் பரவும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply