இந்தியாவின் ஆளுமைக்கு இலங்கை அடிபணியவே வேண்டும : தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன்
இந்தியாவின் ஆளுமைக்கும் அழுத்தத்துக்கும் இலங்கை அடிபணிந்தே தீர வேண்டும். இதனை இறுதியாக இலங்கையில் நடைபெற்ற சார்க் மகாநாடு தெளிவாகக் காட்டியுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சார்க் மகாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக இலங்கைக்கு வந்த போது பாதுகாப்புக்காக இலங்கைக் கடற்பரப்பில் இந்தியக் யுத்தக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை இந்தியாவின் ஆளுமைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன்.
இந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடி பணியமாட்டாதெனவும் யுத்த நிறுத்தத்துக்கு ஒரு போதும் இடமில்லையெனவும் இலங்கைப் பிரதமர் உட்பட அரசாங்க தரப்பு அமைச்சர்கள் தெரிவிப்பது குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், யுத்த நிறுத்தம் செய்யமாட்டோமென யார் எத்தனை தடவைகள் கூறினாலும் விரைவில் நடக்கப் போவது யுத்த நிறுத்தமே. யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா வலியுறுத்தத்தான் போகிறது.. இலங்கை அரசும் அதனைச் செய்யத்தான் போகிறது.
யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலிறுத்தமாட்டாது என்று அக்கட்சி தெரிவித்துள்ள கருத்துக் குறித்துக் கேட்டபோது,
எதிர்காலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஐ.தே.க இவ்வாறு தெரிவித்துள்ளது. தென்னிலங்கைக் கட்சிகளின் சிந்தனை, செயற்பாடு, அறிக்கைகள் குறித்து நாம் அலட்டிக் கொள்வதே இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply