இத்தாலியில் புலி செயற்பாட்டாளர்கள் மேலும் 22 பேர் கைது

இத்தாலியில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் 22 அங்கத்தவர்களை அந்நாட்டு இரகசியப் பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகிதியும் இத்தாலியப் பொலிசார் புலி செயற்பாட்டாளர்கள் 33 பேரைக் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இத்தாலிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்திருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இவர்களின் கைது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு இத்தாலியப் பொலிசார் அறிவிக்கவில்லையென இத்தாலி நிருபர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி சென்ற இலங்கை ஜனாதிபதி அந்நாட்டின் இரகசியப் பொலிஸ்; உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply