ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியிலேயே அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வு: அமைச்சர் டளஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 4 வருட ஆட்சியிலேயே அரச ஊழியர்களுக்கு போதிய சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் பதவி உயர்வுகள் என்பன வழங்கப்பட்டன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த 4 வருடத்திலேயே பொருளாதாரம் அபிவிருத்தி கண்டுள்ளதுடன் நாடு சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது என அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் உறுதியளிக்கப் பட்டவாறு அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத்திட்டத்தில் சகல அரச ஊழியர்களுக்கும் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 4 வருட காலமே அரசாங்க ஊழியர்களின் பொற்காலமாகும்.
2005 நவம்பர் மாதம் முதல் நடைபெற்ற சகல தேர்தல்களிலும் அரசாங்க ஊழியர்கள் எமக்கே கூடுதலாக வாக்களித்தனர். ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்க அடங்கலான எதிர்க் கட்சிகள் அரசாங்க ஊழியர்கள் குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.இம்முறை தேர்தலில் சுமார் 4 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தல்களைப் போன்று எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தலிலும் அரசாங்க ஊழியர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிப்பர் என்பது உறுதி. ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்றம் கூட உள்ளது. 30 ஆம் திகதிக்கு முன்னர் புதிய வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்.
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் அவர்களின் சலுகைகளை வெட்டிவிடவும் நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்க இன்று அரச ஊழியர்கள் குறித்து கவலைப்படுவது கேலிக்குரியதாகும். ஐ.தே.க. ஆட்சியில் இருக்கும் காலங்களிலேயே நாட்டின் பொருளாதாரம் சுபீட்சமடைவதோடு வர்த்தகத்துறையும் மேம்படுவதாக ஐ.தே.க. வெறும் மாயையை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. ஆனால் இந்த கருத்தில் எதுவித உண்மையும் கிடையாது என்பது கடந்த கால ஆட்சிகளையும் மஹி ந்த ராஜபக்ஷவின் 4 வருட ஆட்சி யையும் ஒப்பிட்டால் புலனாகும். ஐ.தே.க.வின் 17 வருட ஆட்சியை மக்கள் சாபமாகவே கருதினர்.
2001 முதல் 2004 வரையான ஐ.தே.க. ஆட்சியில் வாழ்க்கைச் செலவு உயர் வடைந்ததோடு மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். ஐ.தே.க.வின் 17 வருட ஆட்சியில் 660 மெகாவோர்ட் மின்சார உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்களே ஆரம்பி க்கப்பட்டன. ஆனால் கடந்த 4 வருடத்தில் 1200 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
பிறப்பு, இறப்பு வீதம், அரச கடன், தொலைபேசி பாவிப்போர் தொகை, மின்சாரம் பாவிப்போர் தொகை, வெளி நாட்டுக் கையிரு ப்பு என எந்த அளவீட்டுடன் ஒப் பிட்டாலும் கடந்த 4 வருட ஆட்சியி லேயே நாடு சிறந்த நிலையை அடைந்துள்ளது. தனது ஆட்சியில் ஒரு வாழைக் கன்று கூட நட்டியிராத ரணில் விவசாயத்துறை குறித்து பேசி வருகிறார். முடிக்கு கறுப்பு சாயம் பூசுவ தன் மூலமோ முக அலங்காரம் செய் வதன் மூலமோ மட்டும் கட்சிக் கொள்கையை மாற்றி விட முடியாது. யதார்த்தமாக கட்சிக் கொள் கையை ஐ.தே.க. மாற்ற வேண்டும்.
எனவே, எதிர்வரும் பாராளுமன் றத் தேர்தலில் மக்கள் தமது 4 வாக்குகளையும் பாவிக்க வேண்டும். முதல் விருப்பு வாக்கை ஜனாதிப திக்காக வெற்றிலைச் சின்னத்திற்கும் ஏனைய 3 விருப்பு வாக்குகளை விரும்பிய வேட்பாளர்களுக்கும் வழங்குமாறு கோருகிறோம். விருப்பு வாக்கு முறையின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் ஜனாதிபதிக்கு நன்றிக்கடன் செலுத்த முடியாதவர்களுக்கு இம்முறை தேர்தலில் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply