2010இன் 2 ஆவது மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தெரிவு
உலகில் மக்கள் விரும்பிச் செல்லக்கூடிய மிகச் சிறந்த 25 சுற்றுலாப் பகுதிகளில் 2010ஆம் ஆண்டுக்கான தேர்வில், இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. ‘ National Geography’ என்ற பிரபல சஞ்சிகை உலகலாவிய ரீதியில் இயற்கை அழகு நிறைந்த இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரலைத் தாக்கம் மற்றும் யுத்தத்தின் பின்னர் நாடு பழைய சூழலுக்குத் திரும்பியிருப்பதாகவும் இலங்கையின் இயற்கைச் சூழல் ரசிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது இடத்தை நேபாளம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply