நான் வெறும் வாய்ச்சொல் வீரனல்ல; சொன்னதை செய்து காட்டும் செயல் வீரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
வெறும் வார்த்தைகளுக்குள் மட்டும் அடங்கிவிடும் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. நாட்டை ஒன்றிணைப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதைப் போன்று அபிவிருத்தி அடையும் தேச மொன்றை கட்டியெழுப்பும் திட்ட த்தையும் வெற்றிகரமாக முடிக்கவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கம்பஹா மாவட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்தோரையும் அலரிமாளிகையில் சந்தித்தார். சுமார் ஆறாயிரம் பேர் வரை இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அங்கு பேசியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டின் எதிர்கால பரம்பரைக்காக அதனை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், எந்தவொரு நிபந்தனைக்கும் அடிபணியாது பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறை ப்படுத்தியது இக்காரணமாகத்தான். நல்லதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவை அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் அங்கு மேலும் கூறியதாவது,
யுத்தத்தில் வெற்றிபெறுவோம் என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்கான அனைத்து சவால்களுக்கும் நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்து அவற்றை வெற்றி கண்டோம். இந்த வெற்றிகளை யடுத்து நாட்டின் மற்றொரு பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் தயாரானோம். மின்சார பிரச்சினைக்கு முகங்கொடுக்க நாம் பாரிய மின்சார திட்டங்களை ஆரம்பித்தோம். வாக்குகள் கிடைக்காமற் போகும் என்ற அச்சத்தால் நுரைச்சோலை மற்றும் மேல் கொத்மலை ஆகிய திட்டங்களை அன்று ஆரம்பிக்காமல் இருந்தனர். ஆனால் வாக்குகளுக்காக நாட்டின் அபிவிருத்தியை பணயம் வைப்பதா இல்லை இவை இரண்டையும் பாதுகாத்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாக்குகளை விட எதிர்கால பரம்பரைக்காக நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால், நாம் வெறும் வார்த்தைகளுக்குள் அடங்கிப் போன ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நான் இருக்க மாட்டேன் நான் இந்த நாட்டுக்காக செயலாற்ற வேண்டும். நெடுஞ்சாலைகள் இன்றி, மின்சாரம் இன்றி, நாட்டில் அபிவிருத்தி இன்றி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடி யாது. இவை இருந்தால்தான் முதலீட் டாளர்கள் வருவார்கள். இவை அனைத் தையும் சேர்த்துதான் நாட்டைக் கட்டி யெழுப்ப வேண்டும்.
எமது அடிப்படை நோக்கம் நாட்டின் அபிவிருத்தியேயாகும். அது உங்களுக்கு இல்லை. உங்கள் குழந்தைகளுக்கான உங்கள் கடமை. இந்தப் பின்னணியை என்னால் தனித்து செய்ய முடியாது. மஹிந்த சிந்தனையில் நாம் அனைத்து பிரிவுகள் பற்றியும் கூறியுள்ளோம். கலைகள், அபிவிருத்தி, சரித்திரம் இவை அனைத் தைப் பற்றியும் கூறியுள்ளோம். நாட்டின் சரித்திரம் தெரியாமல் நாம் எதைப்பற்றி பேசுவது? இன்று சிலருக்கு நாட்டின் சரித்திரம் பற்றிய அறிவு இல்லை. சரித்திரம் பற்றி தெரியாமல் எதிர்காலத்துக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். உலக பொருளாதாரத்துடன் கூட்டுறவை கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்க தாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் அதே நேரம் இந்த நாட்டை அடிமைப்படுத்த எவருக்கும் இடமளிக்க தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply