பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் மூன்று மில்லியன் தொழில் வாய்ப்பு

நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து புதிய துறைமுகங்கள் விமான நிலையம் நுரைச்சோலை மற்றும் கெரவலபிட்டிய அனல்மின் நிலையங்கள் போன்ற அபிவிருத்திக் கருத்திட்டங்கள் மூலம் சுமார் 3 மில்லியன் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இத்தொழில் வாய்ப்புக்கள் அரசியல் பரிந்துரைகளின் பேரிலல்லாது தகைமைகளின் அடிப்படையிலேயே வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கம்பஹ மாவட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையூம் பலவேறு தொழில் சார்ந்தோரையூம் ஜனாதிபதி நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு கூறினார்.மேலும் எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியினதும் அழுத்தங்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி தாய் நாட்டை யாரும் கைப்பொம்மையாக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் எந்தச் சவாலையூம் தான் எதிர்கொள்ளத்தயார் எனவூம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பெயரளவிலான ஜனாதிபதியாக இருந்துவிட்டுப்போக நான் தயாராக இல்லை. நாட்டை ஒன்று படுத்தி ஒரே இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக எத்தகைய சவாலுக்கும் முகங்கொடுக்கத் தயாராக இருக்கின்றேன். எத்தகைய நெருக்கடிகள் வந்தபோதிலும் அபிவிருத்தியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் வரை நான் ஒயப்போவதுமில்லை என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்;திலும் பல்வேறு சக்திகள் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகின்றன. அந்த அழுத்தங்களுக்கு நான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை. எனது நாட்டின் எதிர்காலச் சந்ததிக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எனக்கிருக்கின்றது. அந்தக் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நான் உறுதிபூண்டிருக்கின்றேன். எந்தச் சக்தியினதும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட நான் தயாரில்லை என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply