மாந்தை பிரதேச சபை, மடு கல்வி வலய தபால் மூல வாக்குகள் நிராகரிப்பு

மன்னாரில் தபால் மூல வாக்குகளுக்கு விணணப்பித்து காத்திருந்தவர்களில் பலரின் வாக்குகள் வாக்களிப்பு தினத்திலேயே அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் ஒன்றாகத்  தபால் மூல வாக்களிப்பு கடந்;த  25 மற்றும் 26 ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்று முடிந்திருக்கும் நிலையில் மன்னாரில் ஒருசில அரச அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்புக்கள் இடம்பெற்றிருக்கவில்லை  எனத்தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரிலுள்ள சுமார் முப்பது அரச திணைக்களங்கள் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவற்றில் முழு அளவிலான  வாக்களிப்புக்கள் இட்பெற்றிருக்கின்றபோதும் ஒரு சில அலுவலகங்களிற்கு தபால் மூல வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை என தெரிகின்றது. ஆயினும் அவ்வாக்குகளுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதற்கான கடிதங்களே அவர்களுக்கு கிடைக்கப்பட்டதாக தபால் மூல வாக்காளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக மன்னாரின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை அலுவலகம் மற்றும் மடு வலய கல்வி அலுவலகம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்ட வாக்குகளே இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் தினத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது. மாந்தை மேற்கு பிரதேச சபை அலுவலகத்தின் 19 வாக்குகளும் மடு வலய கல்வி அலுவலகத்தின் சுமார் 100ற்கும் மேற்பட்ட வாக்குகளும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயினும் இவற்றில் மாந்தை மேற்கு பிரதேச சபை அலுவலகம் சார்பாக கடந்த மாதம் 26 ம் திகதிக்கு முன்னரே தபால் மூல வாக்குகளுக்கான  விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாத்தளை மாவட்டத்தைச்சேர்ந்த 39 வாக்காளர்களினதும் அம்பாறை மாவட்த்திற்கான 13 வாக்காளர்களினதும் வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இது இவ்வாரிருக்க தபால் மூல வாக்களிப்பு தினங்களில் பவ்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமும் அவர்களது தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply