ஜெர்மனியில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த நபர் கைது
விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் நிதி சேகரிப்பாளர் என்று கருதப்படும் நபர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் என ஜெர்மனிய ஊடகம் தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இவர் புலிகளுக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
61 வயதான இவர் ஆயுதக்கடத்தல் விடுதலைப்புலிகளின் ஜெர்மனிய கிளையான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு என்ற பெயரில் நிதி சேகரித்தல் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply