நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்ய வலுவான பாராளுமன்றம் அவசியம்: ஜனாதிபதி
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி எவ்விதத்திலும் சவாலாக அமையாததாலேயே முன்னணியின் அபேட்சகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலைமை ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலியில் தெரிவித்தார்.இருந்த போதிலும் விருப்பு வாக்குக்காக சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிடும் சகலரும் எனது அபேட்சகர்களே. இதனைக் கருத்தில் கொண்டு பிளவுபடாமல் சகல ரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். காலி, சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தின் போது போபேபோத்தல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (ஐ. தே. க.) எம். கே. தஹநாயக்க ஜனாதிபதி முன்னிலையில் ஐ. ம. சு. மு.யில் இணைந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-
அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தில் பாராளுமன்றத்தி ற்குத் தெரிவானாலும் அமைச்சு பதவி கிடைக்காது போகலாம். அதே நேரம் குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்குப் பட்டியலில் கடைசி ஆளாகப் பாராளுமன்றத்திற்கு தெரிவானாலும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம். செயல்திறன் மிக்கவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும்.
ஆகவே நீங்கள் ஆளுக்கு ஆள்பிரிந்து நின்று சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும் செயற் படுங்கள். ஒருவருக்கு நான்கு வாக்குகள் உள்ளன. அதில் முதல் வாக்குத்தான் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படும். ஏனைய மூன்று விருப்பு வாக்குகளையும் சந்தோஷமாகவும், புரிந்துணர்வுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு வலுவான பாராளுமன்றமே எமக்கு அவசியம். அடுத்தவரிடம் தங்கி இருக்கும் பாராளுமன்ற ஆட்சியை அமைப்பது எமது பயணத்திற்குப் பெரும் தாமதத்தை ஏற்படுத்தும். நாட்டுக்கு நன்மை பயக்கும் சட்ட திட்டங்களை நிறை வேற்றிக் கொள்ளுவதிலும் தாமதங்களும், சிரமங்களும் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு ஐ. ம. சு. முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்யுங்கள்.
2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை மூலம் வழங்கிய உறுதிமொழிப்படி நாட்டையும், நாட்டு மக்களையும் ஐக்கியப் படுத்தியுள்ளேன். ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படு கின்றது.
மின்னுற்பத்தித் திட்டங்கள், வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என பல அபிவிருத்தித் திட்டங்கள் செயலு ருப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டைத் துரித அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்லுகின்றோம். அதனால் உங்களுக்கும், உங்களது எதிர்கால சந்ததியினருக்கும் வளமான எதிர்காலம் பெற்றுத் தரப்படும். இதற்காக ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும் செயற்படுங்கள் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான பியசேன கமகே, பேராசிரியர் திஸ்ஸவிதாரன, குணரட்ன வீரக்கோன், பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி, உட்பட முக்கியஸ்தர்கள் பல ரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply