அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானது: ரவூப் ஹக்கீம்

அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தான நாடாளுமன்றமாக அமையப் போகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட இளைஞர் பேரவையின் மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஈழவாதிகள் அல்லாத நாடாளுமன்றம் ஒன்றை ஜனாதிபதி கேட்கின்றார். இப்போது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பூரண அமைதி ஏற்பட்டுள்ளது. எனவே அவரது மொழியில் கூறும் ஈழவாதிகள் இந்நாட்டு சிறுபான்மை இனங்களே.

ஜனாதிபதி வேண்டி நிற்பது தனிப் பெருமபான்மை இனத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம் ஒன்றையாகும். இதற்கான திட்டத்தை வகுத்து சிறுபான்மையினரை முட்டி மோத விட்டு பிரித்தாளும் ஒரு ஆட்சி நடைபெறுகிறது. இதற்காக வேண்டியே புதுப்புது அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு 116 அமைச்சர்களை வைத்து ஆட்சி நடத்தப்பட இருக்கிறது. இதன் அடுத்த கட்ட அரங்கேற்றமே சிறுபான்மை இனங்களில் பிரதிநிதித்துவத்தை கூறுபோட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டு தொகுதி வாரிமுறை என்ற போர்வையில் வட கிழக்கிற்கு வெளியேயுள்ள சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதாகும்.

இதுபோன்ற பல விசித்திரங்கள் பல நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுவருகிறது.எனவே ஆபத்தான நாடாளுமன்றத்தில் அவதானமாக நடந்துகொள்ளக் கூடியவர்களையே நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply