கொழும்பு துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தை தாக்குவதற்காக புலிகளின் பதினைந்து பேரைக் கொண்ட அணி ஒன்று கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்புப் பொறுப்பு கடற்படையினரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினருக்கு மேலதிகமாக வெள்ளிக்கிழமையில் இருந்து விசேட அதிரடிப்படையினரும் இராணுவ கமாண்டோ அணியினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர பத்து மோட்டார் சைக்கிள் களில் விசேட அதிரடிப்படையினர் நவீன ஆயுதங்களுடன் துறைமுகப் பகுதியைச் சுற்றி ரோந்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னர் விமான நிலைய வாசலில் பயணிகள் சென்று இறங்கி தமது பொதிகளை கொண்டு செல்ல முடியும். தற்போது விமான நிலைய வளவில் இருந்து ஆயிரம் மீற்றர் தொலைவில் பயணிகளின் பொதிகள் சோதனையிடப்படுகின்றன.

அங்கிருந்து தள்ளு வண்டிகளில் பொதிகளை விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதைத் தவிர வழமையை விட விமான நிலைய சுற்றாடலில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply