ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு செய்தி
கிறிஸ்தவ போதனைகள் மூலம் ஏற்படுத்தப்படும் அன்புணர்வு எமது மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது :-
இயேசுநாதர் உயிர்த்த நாள் பண்டிகை கிறிஸ்துவ பஞ்சாங்கத் தில் மிக முக்கியமான பண்டிகையா கக் கருதப்படுகின்றது. இது மனித இனத்திற்கு நம்பிக்கையைக் கொண்டு வரும் புத்தெழுச்சியையும் மறுமலர் ச்சியையும் குறித்து நிற்கின்றது. இவ்விசேட பண்டிகை தினத்தில் உலகெங்கிலும் பரந்துவாழும் கிறிஸ் துவ மக்கள் கிறிஸ்தவ போதனை களின் மிக அடிப்படை அம்சங்க ளான அன்பு, கருணை, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் ஆழ்ந்த பொருளில் தங்களது கவனங்களைக் குறிக்கின் றனர்.
எமது இலங்கை தாய் நாட்டில் பல தசாப்தங்களாக எமது மக்களை சூழ்ந்திருந்த பயங்கரவாத பீதியிலிரு ந்து நாடு முற்றாக விடுவிக்கப்பட்டு இங்கு வாழும் எல்லா சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கமும் மறு மலர்ச்சியும் ஏற்பட்டுவரும் ஒரு சூழலில் இவ்வருட உயிர்த்தநாள் பண்டிகை இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு மிக முக்கியமான நாளாக அமைகின்றது
இலங்கை தாய் நாட்டில் வாழும் எல்லா சமூகங்கள் மத்தியிலும் சமா தானம், புரிந்துணர்வு என்பன ஏற் பட்டுவரும் ஒரு சூழலில் இவ்வருட உயிர்த்த நாள் பண்டிகை கொண் டாடப்படுவதோடு பயங்கரவாத த்தின் காரணமாக மிக நீண்டகால மாக திறக்கப்படாதிருந்த பல கிறி ஸ்தவ தேவாலயங்கள் இன்றைய இந்த சிறப்பான பண்டிகையின் போது வணக்க வழிபாடுகளுக்கான மத்திய நிலையங்களாக அமைய விருக்கின்றன.
கிறிஸ்தவ போதனைகள் மூலம் ஏற்படுத்தப்படும் அன்புணர்வு எமது மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப உதவ வேண்டும். அந்த அன்பும் கரு ணையும் இப்பூவுலகில் எம்மோடு சேர்ந்து வாழும் எல்லா உயிரினங் களையும் சென்றடைய வேண்டு மென்பதோடு அது நம் எல்லோரு க்கும் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இயற்கையின் கொடைகளையும் சென்றடைய வேண்டும்.இவ்வருட உயிர்த்தநாள் பண் டிகை இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பண்டிகையாக அமைய வாழ்த்துகின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply