ஈராக்கில் நடந்த போர்குற்றம் தொடர்பில் அமெரிக்கா விசாரிக்கப்படவேண்டும் : இலங்கை

2007 ஆம் ஆண்டு ஈராக்கிய பொதுமக்கள் மற்றும் ரொயிட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் உட்பட 25 பேரை அமெரிக்க விமானப்படையினர் துரத்தி துரத்தி சுட்டு கொலை செய்த காட்சி அம்பலமாகியதனை தொடர்ந்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் இலங்கை அரசாங்கமும் உசாராகியுள்ளது. அதாவது அமெரிக்கா தமது கையில் உள்ள இரத்தத்தினை முதலில் களுவ வேண்டும் என்றும் அதன் பின்னரே அபிவிருத்தி அடைந்த நாடுகளை கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

இலங்கை சார்பில் கெகலிய ரம்புக்வெல கூறுகையில் அமெரிக்கா 2007 ல் போர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ அமெரிக்க பிரெஸ் கிளப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ அமெரிக்க வான் படையினர் ஹெலிகொப்டர் மூலம் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொலை செய்தமை தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ரொய்ட்டர்ஸ் செய்தியாளரும் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பின்னர் அப்பாவி பொதுமக்கள் உடலிற்கு பக்கத்தில் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து அவர்கள் ஆயுததாரிகள் என சோடிக்கப்பட்டது.

ஆனால் இன்னொரு அப்பாச்சி கெலிகொப்டரில் இருந்து வேறொரு சிப்பாயினால் தாக்குதல் நடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவில் இது அப்பாவி மக்களைத்தான் குறிவைத்து கொலை செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட கொலைகளை செய்த வானோடி கம்பியூட்டரில் சுட்டு விளையாடுவது போல் செயற்பட்டுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகின்றது. இதனால் இப்போ இலங்கையும் நீங்களும் (அமெரிக்கா) தப்பு செய்துள்ளீர்கள். ஆகவே எல்லாவற்றையும் மறப்பதே நல்லது. இல்லாவிடில் முதலில் உங்கள் படைகளை விசாரணை செய்யுங்கள். அத்துடன் பான் கீ மூன் அமெரிக்காவிற்கும் விசாரணைக்குழு அமைக்கவேண்டும் என கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply