15 வருடங்களின் பின் யாழ். மின்சார-மணிக்கூட்டு வீதி இன்று திறப்பு
15 வருட காலமாக பூட்டப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மின்சார – மணிக்கூட்டு வீதி இன்று நண்பகல் 12.00 மணியளவில் மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் போது மூடப்பட்ட இவ் வீதியானது இதுவரை காலமும் இராணுவ முகாமாகவே இருந்து வந்தது. நூற்றுக்கு மேற்பட்ட கடைகள், வீடுகளைக் கொண்ட இவ்வீதியை இன்று காலை சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
இவ்வீதியில் அமைந்துள்ள கடைகளும் வீதியும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ளன. இதுவரை காலமும் மக்கள் இப்பகுதிக்குள் அனுமதிக்கப்படாததால் பலருக்குத் தங்கள் வீடுகள், கடைகளை அடையாளம் காண முடியாத நிலையிருந்தது.இவ்வீதியில் முன்னர் குடியிருந்த மக்களையும், கடை உரிமையாளர்களையும் அழைத்த இராணுவத்தினர், அவர்கள் முன்னிலையில் மேற்படி வீதியினைத் திறந்து விட்டனர். எனினும் இவ்வீதியில் அமைந்துள்ள சுபாஸ் ஹோட்டல் அடங்கலான வீதி இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply