இலங்கையிலிருந்து கூடுதல் தேயிலையை கொள்வனவு செய்ய ஈரான் முடிவு

இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யும் தேயிலையின் அளவை இருபது (20) மில்லியன் கிலோ கிராம்களால் அதிகரிப்பதற்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு முடிவு செய்துள்ளது.பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டி. எம். ஜயரட்னவுக்கும், ஈரானின் இலங்கைக்கான தூதுவர் ரஹீமி ஹோஜிக்கு மிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஈரானின் மேற்படி தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வருடா வருடம் ஈரான், இலங்கையிலிருந்து 30 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை கொள்வனவு செய்து வருவது தெரிந்ததே.இலங்கையின் தேயிலையைக் கொள் வனவு செய்வதில் ரஷ்யா முதலிடத்தைப் பெற்றுள்ள போதிலும் ஈரான் நான்காவது இடத்தில் உள்ளது. அமைச்சருக்கும், ஈரான் தூதுவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது, ஈரானுடனான பொருளாதார உறவை மேம்படுத்திக்கொள் வதற்கான இலங்கையின் நடவடிக்கைகளை ஈரான் தூதுவர் பெரிதும் பாராட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply