பொதுமக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவிப்பு

வன்முறைகள் மற்றும் அசம் பாவிதங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொது மக்களுக்கும், சகல வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவித்துக்கொள்வதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான தேர்தல் நடைபெற்றதாக தெரிவித்த அவர், பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார்.தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதிமுறைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு அமுலில் உள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றார். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிரு க்கும் 58,800 பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்தும் இந்த நாட்களில் கடமையில் இருப்பர் எனவும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தோல்வியடைந்தவர்களும் அமைதியாக செயற்படுமாறு தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், எவரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறு குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.

வடக்கு கிழக்கில் தேர்தல் வாக்களிப்பு மிகவும் அமைதியாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், 30 வருடத்திற்குப் பின்னர் எவ்வித வன்முறையுமின்றி வடக்கு, கிழக்கில் தேர்தல் நடைபெற்றுள்ளது என்றார். நீதியானதும், அமைதியானதுமான தேர்தலை நடத்துவதற் குத் தேவையான வகையில் வடக்கு, கிழக்கு உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பொலிஸாரும் அவர்க ளுக்கு உதவியாக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனரென்றும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply