புத்தாண்டு அனைத்து வழிகளுக்குமான புதிய ஆரம்பமாக அமைய வேண்டும்
முப்பதாண்டுகளுக்குப் பின்னர் முழு இலங்கையிலும் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து சுதந்திரமாகக் கொண்டாடும் இப்புத்தாண்டானது அனைத்து வழிகளு க்குமான புதிய ஆரம்பமாக அமையுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமது புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புது வருடப் பிறப்பை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
சிங்கள, தமிழ் புத் தாண்டு என்பது ஒவ் வொரு ஆண்டும் உதய மாகின்ற போதிலும் கூட இலங்கை வாழ் மக்கள் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாகவும், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாகவும் கருதியே செயற்படு கின்றனர்.
இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள் எமது கலாசாரமாக மாற்றம் பெற்றுள்ளமை மூலம், புது வருடப் பிறப்புடன் எமது சமூகத்திலே புத்துணர்ச்சியொன்று ஏற்படுவதை எடுத்துக் காட்டுகின்றது.
சிங்களவர்களின் பழக்க வழக்கங்களை பேணிப்பாதுகாத்து பழைய கோபதாப ங்களை மறந்து புதிய உணர்வுடன் பணியாற்றுவதற்காக இந்த தினம் உதயமாகும் வகையில் முதியவர்கள், சிறார்கள் என்ற அனைவரும் 365 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
புத்தாடைகள் அணிந்து சுப முகூர்த்தங்களுக்கு முன்னுரிமையளித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே விடயத்தை மேற்கொள்ளும் புத்தாண்டானது, இலங்கை கலாசாரத்திலே ஒற்றுமையை எடுத்துக் காட்டும் சிறந்த காரணியாகும்.
இந்த பழக்க வழக்கங்களை நினைவு கூருவதற்குக் கூட சுதந்திரமொன்று காணப்படாத ஒரு யுகத்தை நாம் கழித்து வந்துள்ளோம். சாபத்திற்குள்ளான பயங்கரவாத கெடுபிடிகளை இல்லாதொழி த்து சுதந்திரத்தினைப் பெற்றுக்கொண்ட நாட்டிலே கொண்டாடப்படும் இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டானது, முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு வெகு விமரிசையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
30 ஆண்டுகளின் பின்னர் முழு இலங்கையிலும் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கை முழுவதிலும் சுதந்திரமாகக் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டானது அனைத்து வழிகளிலும் புதிய ஆரம்பமொன்றினை பிரதிபலிக்கச் செய்யும் ஒரு நாளாகக் காணப்படுகின்றது. உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் தமது வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply