ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதிகளை அனுப்ப வேண்டாம்

ஐரோப்பிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தபால் மற்றும் பொதிகளை அனுப்ப வேண்டாம் என தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க அறிவித்துள்ளார். ஐஸ்லாந்தில் எரிமலைக் குமுறல் தொடர்கின்ற நிலையில், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்கான இருவழி விமானசேவைகள் காலவரையறையின்றி ரத்துச்செய்யப்பட்டுள்ளதுடன், சில விமான நிலையங்களும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன.

இந்நிலையில், குறித்த நாடுகளில் உள்ள தமது உறவினர்கள், நண்பர்களுக்கு வான் கடிதம் மற்றும் பொதிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக அனுப்பிவருகின்றனர். ஆயினும், கொழும்பிலிருந்து விமான சேவைகள் இடம்பெறாமையால் அத்தபால்கள் சம்பந்தப்பட்ட தபால் பரிவர்த்தனை நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

எனவே, விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரையில் பிரித்தானியா, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், ரஷ்யா, சுவீடன், சுவீட்சர்லாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு வான் கடிதம் (எயார் மெயில்) மற்றும் பொதிகளை அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply