அரசுக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கைக்கு கோடிக்கணக்கான ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவிருந்த ஹெஜ்ஜிங் ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஐக்கிய தேசியக் கட்சி இன்று பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளித்தது.
கடந்த மூன்று வருடங்களாக ஆட்சியிலிருக்கும் இந்த அரசாங்கத்தின் மீது ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரும் முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவாகும்.
தமது கட்சியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் முடிந்தால் முகங்கொள்ளட்டும் அல்லது பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லட்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply