புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற் கான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், கட்சித் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள இப் பதவிப் பிரமாண வைபவம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதியவர்களு க்கும், இளையவர்களுக்கும் முன்னுரி மையளிக்கப்படுவதோடு 40 பேரைக் கொண்டதாக இந்த அமைச்சரவை அமையவுள்ளது. கடந்த அமைச்சரவைகளில் அமைச்சர்களாகத் திகழ்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடன் புதிய முகங்கள் பலவும் இம்முறை அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்கின்றனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்முறை அமைச்சர் தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.அமைச்சரவை 40 பேரைக் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ஒரு அமைச்சருக்குப் பல அமைச்சுப் பொறுப்புக்கள் ஒப்ப டைக்கப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply