கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்தும் ‘மாபெரும் இசை நிகழ்சி’
இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களிலேயே தமிழ் – சிங்கள மக்களுக்கிடையே புரிந்துணர்வு, சகவாழ்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்திவருகிறது. அந்தவகையில் இவ்வாண்டும் ‘மாபெரும் இசை நிழ்ச்சியாக கொண்டாடுகிறது. (24.04.10) மாலை 5.00 மணிக்கு, 1133 லெஷ்லி வீதியிலுள்ள (எக்லிங்ரன் ரூ லெஷ்லி) ‘கொறியன்’ கலாசார மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு தமிழ் – சிங்கள நண்பர்களை, நண்பியரை பெருந்திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
இவ்விழாவில் பரதநாட்டியம், கண்டிய நடனம், கதகளி, சீன சிங்க நடனம், ஆப்பிரிக்க டிரம் மற்றும் பல பல்கலாசார நிழ்ச்சிகளுடன் ‘நிப்புல்’ குழு வழங்கும் ‘நண்பர்கள்’ என்னும் இசை நிகழ்சியும் நடைபெறும். இவ்விழாவுக்கு கனடாவில் வாழும் அனைத்து இலங்கை மக்களையும் அன்புடன் அழைக்கின்றனர் கனடிய ஜனநாய தமிழ் கலாசார மன்றத்தினர்.
தொடர்புகளுக்கு:
தொலைபேசி – (416) 588 – 3230.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply