புதிய அரசாங்கத்தின் “மினி பட்ஜட்” ஜுலையில்

புதிய அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான “மினி பட்ஜட்” எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.அதற்கு முன்னதாக மூன்று மாத காலத்திற்குரிய ஒரு கணக்கறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பிப்பாரென்றும் தெரிவித்த அமைச்சர் சில்வா, ஜுலை மாதத்தில் மினி பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்தே 2011 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படு மென்று கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கணக்கு அறிக்கையின் பின்னர், அரசாங்கம் இதுவரை செய்த செலவுகள், வரவுகள் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுமென்று குறிப்பிட்டார். புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அடித்தளம் இடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் நிமல், எதிர்க்கட்சி குரோத அரசியலையிட்டு நாகரிக அரசியலுக்குப் பிரவேசித்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply