ஊடகவியலாளர் பிரச்சினைகளை தீர்க்க அமைச்சில் முறைப்பாட்டு கருமபீடம்: மேர்வின் சில்வா

ஊடகவியலாளர்கள் தங்கள் பிரச்சி னைகளை முன்வைப்பதற்கு வசதியாக முறைப்பாட்டுப்பீட மொன்றை தனது அமைச்சில் அமைக்கப் போவதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். ஊடகவியலாளர் பிரச்சினை கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படையாக ஆராயப்பட்டு மாதாந்தம் பிரச்சி னைகள் தீர்க்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

ஒரு நாட்டின் அரசாங்கத்தை விட ஊடகத்துக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது என குறிப்பிட்ட அவர், ஊடகங்கள் சமூகப் பொறுப் புடன் செயற்பட முன் வரவேண்டு மெனவும் அழைப்பு விடுத்தார். தகவல் ஊடகத்துறை பிரதியமைச்சரான மேர்வின் சில்வா கொழும்பு பொல்ஹேன்கொட யிலுள்ள அமைச்சில் நேற்றுத் தமது பொறுப்புக்களைக் கையேற்றார்.

“இதில் பேசிய அவர், கடந்த கால தவறுகளை மறந்து ஜனநாயகத்தையும் நாட்டையும் பாதுகாக்கும் புதிய ஊடகக் கலாசாரமொன்றை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” எனவும் தெரிவித்தார்.

சில ஊடகங்கள் தேர்தல் காலங்களில் தவறிழைத்துள்ளன. தவறு செய்வது இயல்பு. மன்னிப்பது தெய்வகுணம். எனினும் இனியும் தவறு நிகழாமல் நடுநிலையாகச் செயற்பட ஊடகங்கள் முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தையும் மக்கள் நலனையும் பாதுகாக்கும் வகையில் செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களைத் தம் உயிரைப் பயணம் வைத்தாவது பாதுகாப்பதாகவும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

ஊடகங்கள் பொறுப்புடனும் நடுநிலையுடனும் செயற்படவேண்டுமென வலியுறுத்திய அவர், நாடு, நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புச் செய்வதுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்காத வகையில் அதன் செயற்பாடுகள் அமைய வேண்டுமெனவும் தெரிவித்தார். சமூகத்தில் ஊடகங்களுக்குள்ள பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றுவதில் ஊடகங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கணேகல, லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார, பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவின் பாரியார் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டிற்குப் பொருத்தமான புதிய ஊடகக் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது இலக்கு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இதனை நாம் மேற்கொள்வோம்.

பணத்துக்கு விலைபோகாத ஊடகத்துறையை நாம் கட்டியெழுப்புவோம். ஊடகத்துறை சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்து அதனை நிவர்த்திப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் ஊடகத்துறை அமைச்சிற்கு இத்தகைய குறைகளை ஊடகவியலாளர்கள் சமர்ப்பிக்க முடியும். அதற்காக விசேட நிபுணத்துவகுழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்படும்.

சேறு பூசும் செயற்பாடுகளைக் கைவிட்டு குற்றங்கள் காணப்பட்டால் உரிய வகையில் எம்மிடம் அது பற்றி பேசலாம் என் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அதனை ஆதார பூர்வமாக நீரூபிக்க முடியுமானால் நான் எனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply