ஜெர்மனியில் புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக லாரா தகவல்!
புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மனைவி லாரா வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி லாரா ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். ‘இதயத்தில் இருந்து சொல்கிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை இவர் தொகுத்து எழுதி உள்ளார். அதில் பல்வேறு ரகசியத் தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 2007ஆம் ஆண்டு ஜெர்மனியில் தனக்கும், புஷ்ஷுக்கும் விஷம் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவலையும் அவர் அந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
அவர் எழுதிய அந்தப் புத்தகதில்,
“2007ஆம் ஆண்டு ஜி௮ நாடுகள் மாநாடு ஜெர்மனியில் நடந்தது. இதில் என் கணவருடன் நானும் கலந்து கொண்டேன். அங்குள்ள ரிசார்ட் ஓட்டலில் நாங்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தோம்.
அப்போது புஷ்ஷுக்கு உடல் நலம் பாதித்தது. நானும் பாதிக்கப்பட்டேன். காலையில் இருவராலும் எழுந்திருக்க முடியவில்லை. வைரஸ் காய்ச்சல் தாக்கி இருக்கலாம் எனக் கருதினோம். இதனால் அன்று காலை நடந்த கூட்டத்தில் புஷ் பங்கேற்கவில்லை.
நாங்கள் மட்டுமல்ல, எங்களோடு வந்திருந்த வெள்ளை மாளிகை குழுவினரும் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடக்கவே சிரமப்பட்டார். எல்லோருக்குமே காது சரியாகக் கேட்கவில்லை. முதல் நாள் இரவு எங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் கலந்திருக்கலாம். அதனால்தான் எல்லோருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அமெரிக்க ரகசிய புலனாய்வு குழு இது பற்றி விசாரணை நடத்தியது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று எழுதப்பட்டிருக்கின்றது.
புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அப்போது எந்த தகவலும் வரவில்லை. லாரா எழுதிய புத்தகம் மூலம் முதல் முதலாக இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply