மன்னாரில் மேதின நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றது
மன்னாரின் பல பகுதிகளிலும் மே தினக்கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றது. உலக தொழிலாளர் தினம் வெகு சிறப்பாக அணுஷ்டிகப்படும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் அது சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றது. தொழிலாளர் தினத்தை ஒட்டி மன்னாரிலும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றது. உலக தொழிலாளர் தினம் அணுஷ்டிக்கப்படும்; நிலையில் உலகம் வாழ் கத்தோலிக்க மக்கள் தமது தொழிலாளர்களது பாது காவலரான புனித சூசையப்பரின் தினத்தையும் நேற்றய தினம் (01.05.2010) நினைவு கூர்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில் மன்னாரிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நேற்றய தினம் (01.05.2010) தொழிலாளர் தின சிறப்பு ஆராதனைகள் இடம் பெற்று தொழில் உபகரணங்களும் ஆசீர் வதிக்கப்பட்டிருக்கின்றது. இது இவ்வாரிருக்க தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு பள்ளிமுனை ஆலய நிர்வாகமும் புனித லுசியா விளையாட்டுக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நீச்சல் போட்டி நிகழ்வும் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.
மன்னார் கோந்தைப்பிட்டி கடல்பரப்பில் ஆரம்பித்து பள்ளிமுனைகடற்கரை வரையிலுமான சுமார் இரண்டு கடல்மைல் வரை நீச்சல் போட்டி இடம்பெற்றிருக்கின்றது. மேற்படி போட்டி நிகழ்வினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆரம்பித்து வைத்திருப்பதோடு பேசாலை சிறுத்தோப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மேதின நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கின்றார். இதே வேளை கட்கிடந்த குளம் பகுதியில் புணரமைப்புச் செய்யப்பட்டிருக்கும் புனித சூசையப்பர் தேவாலயத்தினை மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆசீர் வதித்து நேற்றய தினம் (01.05.2010)திறந்து வைத்திருக்கின்றார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply