மன்னாரில் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில்; ஈடுபட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மன்னாரில் தேர்தல் காலங்களில் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் இறுதி காலப்பகுதியில் மன்னார் நகரம் முழுவதும் அணல் பறத்தும் பிரச்சார நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பெரும் முனைப்புடன் ஈடுபட்டு இருந்தன. இந்நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தெளிவற்ற தன்மையையும் தோற்றுவிக்கும் பொருட்டு இனவாதம், மதவாதம் சார்ந்த அனாமதேய துண்டுபிரசுர விநியோகங்களை சிலர் மேற்கொண்டிருக்கின்றனர்.

தனிமனித கௌரவத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமான மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களில் சமூகத்தின் பல்வேறு அந்தஸ்துக்களையும் வகித்து வருபவர்களும் உள்ளடங்கியிருப்பதாக  தெரியவருகின்றது. குறிப்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில்; இளையவர் தொடக்கம் அரச பணிகளில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களும் ஒருசில ஊடகக்காரர்களும் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அமைச்சர் அவர்களின் செயற்பாடுகளை செய்தி சேகரிப்பதான போர்வையில் அவர் பின்னால் இழுபட்டுத்திரிந்த அனுமதியற்ற நடுநிலைத்தன்மையைப் பேனாத ஊடகக்காரர்கள் சிலரே அமைச்சர் தொடர்பான புகைப்படங்களையும் செயற்பாடுகளையும் முறைகேடாக பயன் படுத்தியிருப்பதாக அமைச்சரின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அனாமதேய துண்டுப்பிரசுர தயாரிப்புக்களிலும் விநியோகங்களிலும்  ஈடுபட்டு வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பவர்கள் பலர் தற்போது தலைமறைவாகித்திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் நடந்து முடிந்திருக்கும் பொதுத்தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியினர் மூன்று ஆசனங்களையும் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும் ஜக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply