திஸ்சநாயகத்திற்கு பொது மன்னிப்பு
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தததாக கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்சநாயகத்திற்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம், யுத்தகாலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் இத்தீர்ப்பிற்கு எதிராக, அவர் தாக்கல் செய்த மேல் முறையீடு பிணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையில் செல்ல கடந்த ஜனவரி 11ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவை கருத்தில்கொண்டே அவருக்கு இந்த பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply