அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தம்
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கேற்ப அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். நாளை 4ம் திகதியும் நாளை மறுதினமும் பாராளுமன்றத்தில் இதுதொடர்பில் விசேடவிவாதங்கள் பாராளுமன்றத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பயங்கரவாதம், ஆயுத விடயங்கள் மற்றும் காலத்துக்குத் தேவையான சில ஷரத்துக்களுடன் மட்டுமே இம்முறை அவரசரகால சட்டம் விவாதத்திற்கு உட்படுத்தவுள்ளது. இதேவேளை நாடுகடந்த தமிழீழம் அமைக்கும் முயற்சியானது ஒருபோதும் வெற்றியளிக்காது என்றும் இது தொடர்பில் அந்தந்த நாட்டு உயர்ஸ்தானிகர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply