த.தே.கூ-இந்திய உயர்ஸ்தானிகர் இன்று சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவின் அழைப்பையேற்று அவருடனான சந்திப்பில் இன்று திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
“நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் அழைப்புவிடுத்தார். அந்த அழைப்பையேற்று நாம் இன்று நண்பகல் இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ள அவருடனான சந்திப்பின் கலந்துகொள்ளவுள்ளோம். பெரும்பாலும் அனைத்து எம்.பி.க்களும் கலந்துகொள்வர். எனினும் அவருடனான சந்திப்பின்போது என்னென்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தற்போது கூற முடியாது. சந்திப்பின் பின்னர் அது குறித்து தகவல் வெளியிட முடியும்”என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply