12 ஆயிரம் போராளிகளையும் விடுதலை செய்யவேண்டும்: கலாநிதி விக்ரமயாகு
சரத் பொன்சேகாவை மட்டுமல்ல தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் போராளிகளையும் விடுதலை செய்யவேண்டும். அதற்கான போராட்டங்களை எதிர்காலத்தில் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமயாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை மன்மோகன் சிங்கின் நிர்வாகமே நிர்வகிக்கின்றது. உலக முதாலாளித்துவத்தின் முகவராக இருக்கும் இந்தியா, பல்தேசியக் கம்பனிகளினதும் உலக முதலாளித்துவத்தினம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது. எமது தாயகம், எமது வளம் யாவும் இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் இந்திய தலையீடு உள்ளது அமிதாப் பச்சன் வருகின்றார் மிகப் பெரிய வரவேற்பு வழங்கப்படுகின்றது. இது ஏன்? இங்கே தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களுக்கு என்ன நடந்தது. தற்போது யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் விசா வழங்கும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாருக்கு விசா வழங்கப் போகின்றார்கள்.
முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஐலிங்கம் போக விசா இல்லை. நோய் வாய்ப்பட்டிருக்கும், பிரபாகரனின் தாயாருக்கு விசா இல்லை. எனவே எதற்காக விசா அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இன்று திருகோணமலை துறைமுகம் இந்திய கடற்படையின் ஆதிக்கத்திற்குள் உள்ளது. முன்பு இந்திய எதிர்பு காட்டியவர்கள் இன்று ஆட்சிக்குள் அடங்கிப் போயுள்ளனர்.
நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் விரட்டப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இதனால் பட்டினியில் வாடும் நிலை தோன்றியுள்ளது. ஏன் இந்த திடீர் நடவடிக்கை உலக எஐமானார்களின் நவீன சந்தைகளில் மக்களைப் பொருட்கள் வாங்கும்படி நிர்ப்பந்திக்கவே நடைபாதை வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நாடு பட்டகடன்களுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில் உள்ளது. நாசம் நிறைந்த யுத்தத்திற்காக உலகம் முழுவதும் கடன் வாங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவை மட்டுமல்ல சிறையில் இருக்கும் 12,000 தமிழ் போராளிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் மக்களின் தாயகத்திற்கு அதிகாரத்தை வழங்கி நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டும். இதற்காக எதிர்காலத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் கொழுமபில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply