எந்தவொரு சம்பவத்தையும் மறைக்க விரும்பவில்லை: சரத்பொன்சேகா

யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தினரால் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால் அவை வெளிக்கொணரப்படுவதோடு, தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணியின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைப்பெற்ற போது போர்குற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, முன்னாள் இரானுவ தளபதி என்ற வகையில் விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தக் காலப்பகுதியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் எந்தவொரு சம்பவத்தையும் மறைக்க விரும்பவில்லை. இச் சம்பவங்கள் தொடர்பில் எந்தச் சந்தர்ப்பத்திலும் கேட்டாலும் அதனை பற்றி வெளிப்படையாக கூற நான் தயாராக இருக்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply