கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக்குழு பலாலி விஜயம்

யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிந்துகொள்ளும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று பலாலி சென்று திரும்பியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் பலாலி சென்றிருந்தனர்.

அங்கு சென்ற உயர்மட்டக் குழுவினரை வரவேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடிவரும் அனைத்து இராணுவத்தினருக்கும் கோதபாய ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்ததாகவும், பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் நலன்புரி நடவடிக்கைகளை அவர் பாராட்டியதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply